புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) ஒரு வாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் அறிவித்தார். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ‘தமிழ் வார விழா’ அறிவிப்புக்குப் பல்வேறு வகையில் முயற்சியெடுத்த தமிழர் தலைவருக்கு, விழாக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், உலகத் தமிழாராய்ச்சி மன்றப் பொதுச்செயலாளர் பொறியாளர் த.ஞானசேகரன், மும்பை சு.குமணராசன், துரைகண்ணன் (அமெரிக்கா), பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ‘கலைமாமணி’ பொன்னடியார், முத்துமணி நன்னன், மு.முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர் (சென்னை, 29.4.2025).
‘தமிழ் வார விழா’
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
