30.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு; மே 14ஆம் தேதி பதவியேற்பு.
* இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பாகம் 1; 2026இல் 2.0 தொடங்கும் எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பொதுத் தேர்தல் முடிவு அறிவிப்பு – கனடா பிரதமர் கார்னியின் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி:
* பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுக; கார்கே வேண்டுகோள்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆந்திர மாநிலங்களவை இடத்துக்கு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் பக்கா வெங்கட சத்யநாராயணாவை தேர்வு செய்துள்ளது பாஜக; பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட தமிழ்நாடு பாஜகவின் மேனாள் தலை வர் கே. அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை.
தி டெலிகிராப்:
* காஷ்மீரைப் பொறுத்தவரை, அரசாங்கம் பயங்கரவாத குழுக்களை எதிரிகளாக நடத்துகிறது, அதே நேரத்தில் மணிப்பூரில் உள்ள போராளிகளை ஒன்றிய அரசு நட்பு முறையில் நடத்தி வருவதாக தெரிகிறது என மணிப்பூரின் பல மெய்தி சிவில் சமூக அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பான கோகோமி குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா