சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைப்பெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் “வால்டர் ரூபன்” இந்தியாவை பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர்.
மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யா இன்னும் சில இந்திய அறிஞர் களுடன் உரையாடி கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு “கேள்வியை” முன்வைக்கிறார்.
இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத “மகத்தான மானுட ஆளுமையுடையவர்” யார் தெரியுமா?(Who is the unprecedented Human personality of the present india?)
திகைத்து போனவர்கள் காந்தி பெயரை தயக்கத்துடன் சொல்ல காந்திக்கு முன் உதாரணம் கவுதமபுத்தன் என்கிறார் ரூபன்.சிலர் நேரு பெயரை சொல்ல அவருக்கு முன் உதாரணம் அசோகர் என சொல்லி வாயடைக்க வைக்கிறார் ரூபன்.
நீங்களே சொல்லுங்கள் என ரூபனிடம் அறிஞர்கள் சொல்ல தான் எழுப்பிய வரலாற்று புதிர் கேள்விக்குரிய பதிலை சொன்னார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணமற்ற பேராளுமை “பெரியார் ஈ.வெ.ரா தான்” என்றார். இவர்களுக்கு அதிர்ச்சி! எப்படி? எப்படி? ரூபனே அதற்கும் பதிலளித்தார்.
இந்திய சமூகத்தின் மேலிருந்து கீழேவரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வருணாசிரமம், மனுதர்மம், வைதீகம் எனும் நோய்களுக்கு எதிராக தெளிவாக மூர்க்கமாக
சமூகதளத்தில் போராடுகிறார். அதனால்தான்.
(சாகித்திய அகாடமி பொறுப்பாளர் எழுத்தாளர் பொன்னீலன் 25.11.2011
உரையில் கூறிய தகவல்…)