திருமருகல், ஏப். 27- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஆலம ரத்தடி கடைவீதியில் “அன்றும்.. இன்றும்.. என்றும் தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடை பெற்றது.
திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் மு.சின்னதுரை தலைமையிலும் திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் இராச.முருகையன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் ஆகியோர் முன்னி லையிலும் கூட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
இறுதியில் திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் மு.குட்டிமணி உரையாற்றினார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.ஜெயபிரியா, ஒன்றிய மகளிரணி தலைவர் ரம்யா, ஒன்றிய மகளிரணி ஹேமலதா, நாகை நகர அமைப்பாளர் சண்.ரவி, ஒன்றிய து.தலைவர் காமராஜ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், மருங்கூர் காமராஜ், முனுசாமி மற்றும் கஜேந்திரன் உள்ளிட்ட திராவிடர் கழக மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக போன்ற ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.