காஷ்மீர் முதலமைச்சரை சந்தித்த ராகுல் காந்தி

viduthalai
1 Min Read

சிறீநகர், ஏப். 26– ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்  இந்தியா மட்டுமின்றி, பன்னாட்டு அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி காஷ்மீர் சென்றுள்ளார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரவாயல் – சிறீபெரும்புதூர் இடையே
ரூ.1,400 கோடியில் உயர்மட்ட சாலை மேம்பாலம்

அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை, ஏப். 26- மதுரவாயல் – சிறீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 24.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, “பூவிருந்தவல்லி தொகுதி நச ரத்பேட்டை – திருமழிசை தேசிய நெடுஞ் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு முன்வருமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

அந்த மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். தண்டலம் பகுதியில் மேம்பாலம் நசரத்பேட்டையில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை உள்ளடக்கியதாகத்தான் முதலில் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கு பின்னால் மதுரவாயல் முதல் சிறீபெரும்புதூர் வரை சென்னை வெளிவட்ட சாலையில், 8 கிலோமீட்டர் நீளத்தில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *