தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத்,நவ.14 – தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள் ளது. இதில் முதலமைச்சர் கே.சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடர்ந்து மூன்றாவது முறை யாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர் எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவ.10ஆம் தேதி முடிவடைந்தது. நேற்று (13.11.2023) தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 15-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளி லும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி போட்டி யிடுகிறது. காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளது.

119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதி யில் 145 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதி யில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட் டியிடுகிறார். 

மேட்ச்சல் தொகுதியில் 116 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக நாராயணப் பேட்டை தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. 

அக்டோபர் 9-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து  நவம்.11-ஆம் தேதி வரை ரூ.544 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர் தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *