சந்தர்பூ, ஏப். 21- மத்தியப் பிரதேசம் சத்தர்பூ மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்து கொண்டு ஏற்கெனவே பாகேஷ்வர் தாம் என்ற மடத்தை திறந்து, பிறகு சாமியாராக மாறிய 25 வயது தீரேந்திர சாஸ்திரி ஹிந்து ராஷ்டிரம் பிறகு பார்க்கலாம் முதலில் ஹிந்து கிராமம் செய்வோம் என்று மேலும் பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டு ஹிந்து கிராமம் என்ற ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் துவங்கி உள்ளார்
இந்த கிராமம் முழுக்க முழுக்க ஹிந்துக்களை மட்டுமே குடியமர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்களின் வாழ்க்கை முறை வேதிக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் சாஸ்திர அனுஸ்டானங்களை தீவிரமாக கடைப் பிடிக்கவேண்டும் வேற்று மதத்தவர்களுக்கு கிராமத்தில் நுழைய அனுமதி இல்லை
ஏப்ரல் 2, 2025 அன்று தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அரசுபுறம்போக்கு நிலத்தில் இந்த கிராமத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த கிராமத்தில் சுமார் 1000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளை வாங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கு வசிக்கலாமே தவிர, அவற்றை விற்க முடியாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
வீடுகளின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை இருக்கும் என்று மதிக்கப் படுகிறது. நன்கொடைகள் மூலம் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.
இந்த ஹிந்து கிராமம் இரண்டு ஆண்டுகளில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் அடிக்கடி மிகவும் மோசமான செயல்களால் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசபப்டுபவர், இவரை பார்க்கவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நேரடியாகவே தள்ளி நின்றே பேசவும் – அடிக்கடி குளிக்க முடியாது என்று நகைச்சுவையாக பேசுவது போல் தன்னுடைய ஜாதிவெறியைக் காண்பிப்பார். இவரது சகோதர்மீது பல்வேறு நில மோசடி வழக்குகள் உள்ளன.