பெங்களுரு, ஏப்.21 புதிய கல்வி கொள்கையில் கீழ் வரும் அனைத்து ஆங்கில நூல்களிலும் சமஸ்கிருத ஹிந்தி பெயர்கள்! பாரம்பரியத்தைக் காப்பதற்காக மாணவர்களுக்கு எளிதில் புரிவதற்காக இந்த முடிவாம்.
புதிய கல்விகொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி சமஸ்கிருத சொற்களை ஆங்கிலத்தில் எழுதி உள்ளது,
சமஸ்கிருதத்தை ஹிந்தியைத் திணிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும், மேலும் தமிழ்நாட்டின் வழி காட்டுதலின் பேரில் பல மாநிலங்கள் மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்துப் போராடும் நேரத்தில் வெளிவந்துள்ளது.
ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
இதுவரை, ஒன்றிய அரசின் மொழி நூல்கள் எப்போதும் அதே மொழியில் தலைப்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வரை 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான பழைய ஆங்கில பாடப்புத்தகங்கள் முறையே ஹனிசக்கிள் மற்றும் ஹனிகோம் என்று தலைப்பிடப்பட்டிருந்தன.
இரண்டு வகுப்புகளுக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகங்களின் தலைப்பு பூர்வி, இது ஹிந்தி சொல் “கிழக்கு” என்ற பொருளுடன், சமஸ்கிருத சொற்களில் வரும் ராகத்தில் ராகத்தின் பெயரும் ஆகும்.
1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப்புத்தகங்கள் மிருதங்க் என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கானவை சந்தூர் என்றும் மறுபெயரிடப்பட்டு உள்ளன. இரண்டுமே இசைக் கருவிகளின் பெயர்கள்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடங்களுக்கு, முன்னணி பாடப்புத்தக தயாரிப்பு அமைப்பு தனது புத்தகங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது பதிப்புகளில் வெளியிட்டது.
இதுதொடர்பாக ஒன்றிய கல்வி பாடநூல் தயாரிப்பு குழு வில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறுகையில், இந்த புத்தகங்கள் பாரம்பரியமாக அவை வெளியிடப்பட்ட மொழிக்கு ஏற்ப ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் தலைப்புகளைக் கொண்டிருந்தன.
6ஆம் வகுப்புக்கான முந்தைய கணித புத்தகம் ஆங்கில பதிப்பிற்கு Mathematics என்றும், ஹிந்தி பதிப்பிற்கு Ganit என்றும், உருது பதிப்பிற்கு Riyazi என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளுக்கும் தலைப்பை கணித பிரகாஷ் என மாற்றியது.
அவர்கள் என்ன சாதிக்க விரும்பு கிறார்கள் என்பது தெளிவாக இல்லை’’ என்று ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறினார்.
6ஆம் வகுப்பு ஆங்கில மொழி பாடப்புத்தகத்தின் முன்னுரையில் அதன் இயக்குநர் தினேஷ் பிர சாத் சக்லானி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி கபூர் போன்றோர் ‘‘புத்தகத்தைப் பற்றி’’ என்ற அறி முகப் பகுதி, ஏன் அது பூர்வி என்ற ஹிந்தி தலைப்பைக் கொண்டுள்ளது என்பது பற்றி குறிப்பிடவில்லை.
‘‘பூர்வி தனது உள்ளடக்கங்களில் இந்திய அறிவு அமைப்புகளின் பெரும் கருவூலத்திலிருந்து துணுக்குகளை, இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இணைத்து, சுற்றுச்சூழல் உணர்திறன், பாலின சமத்துவம், டிஜிட்டல் திறன்கள் போன்ற மதிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது’’ என முன்னுரை கூறுகிறது. சில ஆங்கில வழி புத்தகங்கள் ஹிந்தி படையெடுப்பிலிருந்து விடு பட்டுள்ளன. 6ஆம் வகுப்புக்கான சயின்ஸ் என்ற அறிவியல் நூல்களின் பெயர்களும் இப்போது கியூரி யாசிட்டி என்ற புதிய ஆங்கில தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது,
6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறி வியல் பாடப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பு ‘‘எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியான்ட்’’ என்ற தலைப்புடன் வருகிறது, அதே நேரம் ஹிந்தி பதிப்பு ‘‘சமாஜ் கா அத்யயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2006இல் என்.சி.ஆர்.டி. பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த டில்லி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் அபூர்வானந்த், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை வழங்கும் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கி னார்.
‘‘இது ஹிந்தி காலனியாதிக்கம். என்.சி.ஆர்.டி. இதை மிகவும் கீழ்த்தர மான முறையில் செய்கிறது,’’ என்று அவர் கூறினார். என்.சி.ஆர்.டி. தலைப்பு களை வழங்கும் விதம் தமிழ்நாட்டின் மொழி கொள்கைக்கான போராட்டம் சரியென நிரூபித்துள்ளது.
இது ஹிந்தி பேசாதமக்களுக்கு குறுக்கு வழியில் ஹிந்தியை திணிக்கிறது
அய்.என்.யூ.விலிருந்து ஓய்வு பெற்ற மொழியியல் பேராசிரியர் அன்விதா அப்பி கூறுகையில்: ‘‘ஒரு புத்தகத்தின் தலைப்பு அதன் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டும். பூர்வி அல்லது சந்தூர் போன்ற தலைப்புகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. கிழக்கு அல்லது சமஸ்கிருத ராகம் என்பதை ஆங்கில மொழிப்பாட நூலில் தலைப்பாக கொடுத்து என்ன கூறவருகிறார்கள்?’’
‘‘மேலும், கற்பித்தல் மொழி ஆங்கிலம் எனும்போது, தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.’’
கணித பிரகாஷ் என்பதில் உள்ள ‘கணித’ போன்ற சில ஹிந்தி வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை ஆங்கில புத்தகங்க ளின் ஹிந்தி தலைப்புகள் ரோமன் எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளன. ‘‘ரோமன் எழுத்து முறை பல் அண்ண ஒலி (dental nasal) மற்றும் பின்வளைவு அண்ண ஒலி (retroflex nasal) ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இது ‘ண’ (கணிதத்தில்) என்பதற்கு தவறான உச்சரிப்பை தருகிறது,” என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்பு களை வழங்குவதற்கான கார ணங்களை கேட்டு என்.சி.
ஆர்.டி. இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.ஆர்.டி. 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 2023 முதல் புதிய பாடப்புத்தகங்களின் தொடரை வெளியிட்டு வருகிறது.
2023 இல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்த கங்களை வெளியிட்டது, 3 மற்றும் 6ஆம் வகுப்புகள் 2024இல் புதிய புத்தகங்களைப் பெற்றன. இப்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்த கங்களை வெளியிடுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முழுமையாக சமஸ்கி ருத ஹிந்தி மயமாக்கம் நடந்துள்ளது
எடுத்துகாட்டாக குடும்பச் சங்கிலி (பரம்பரை) என்ற ஆங்கில நூலில் பர் தாதா, பர் தாதி, போத்தா, போத்தி, பர் போத்தா, பர்போத்தி, தாதா, தாதி, நானா நானி, என்று எழுதி பின்னர் பாதர் மதர் என்று பெயரளவிற்கு ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளது. பிறகு பேட்டா பேட்டி என்று மீண்டும் ஹிந்தியிலேயே கொடுத்துள்ளது.
மேலும் உடற்கல்வி ஆங்கில நூலுக்கு கேல் யோகா (விளையாட்டு யோகா) என்றும் தொழிற்கல்வி நூலான வெகேசனல் ஆங்கில பாடநூலுக்கு கவுசால் போத்(துடிப்பான கல்வி) என்று ஓவியம் இதர கைவினை கலைப்பொருள் தயாரிக்கும் பாட நூலிற்கு பன்சுரீ(புல்லாங்குழல்) என்றும் பெயர் வைத்துள்ளனர்
ஆங்கில நூல் முழுவதுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சொற்கள் 60 விழுக்காடு ஹிந்தியிலேயே எழுதப்பட்டுள்ளது.