கருநாடகா தலைநகர் பெங்களுருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியை இறக்கிவிட்ட பிறகு, சில்லரை தொடர்பான விவாதம் நடந்தது, அப்போது ஹிந்திக்கார பயணி கன்னடமும், ஆங்கிலமும் தெரிந்த ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து, ஹிந்திதான் எங்கும் இருக்கிறது. பெரிய நகரங்களில் ஆட்டோ ஓட்டவேண்டும் என்றால் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்; என்னை கன்னடத்தில் பேசு என்று கூற உனக்கு உரிமை இல்லை. நீ கன்னடம் பேசினால் எனக்கு புரியவில்லை.இந்தியாவின் பொதுவான மொழியான ஹிந்தியைக் கற்றுக்கொண்டு ஹிந்தியில் பேசு என்று மிரட்டுகிறார்.
கருநாடகத்தில் அய்ந்து ஆண்டு பாஜகவை ஆட்சியில் அமர வைக்கப்பட்டதன் விளைவு. என்ன தெரியுமா? கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே தங்கள் தாய்மொழியான கன்னடத்தில் பேச உரிமை இல்லையோ!