தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.4.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றுப் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, த. வேலு, கிருஷ்ணசாமி, இ. பரந்தாமன், தாயகம் கவி, சிந்தனைச்செல்வன், அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, தமிழரசி, துணை மேயர் மு. மகேஷ் குமார், தாட்கோ தலைவர் நா. இளையராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.கட்சமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books