ஜெனீவா, ஏப்.13- பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப் பால் உலக வர்த்தகம் சரியும் என அய்.நா. பொருளாதார நிபுணர் கூறியுள்ளார்.
90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதித்து உள்ளார். இது 5. இது பன்னாட்டு அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச் சியை எதிர்கொண்டன.
இதைத் தொடர்ந்து சீனாவை தவிர பிற முக்கியமான நாடுகளுக்கு எதிரான வரியை 90 நாட்களுக்கு அவர் நிறுத்தி வைத்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது 125 சதவீத வரியை அறிவித்து உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை பன்னாட்டு வர்த்தக போருக்கு வித்திட்டு உள்ளது.
நீண்டகால மாற்றம்
இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் உலக அளவில் வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சரியும் என அய்.நா.பொருளாதார நிபுணர் கூறியுள்ளார். அந்தவகையில் பன்னாட்டு வர்த்தக மய்யத்தின் செயல் இயக்குநரான பமீலா கோக் ஹேமில்டன் ஜெனீவாவில் கூறியதாவது:-
அமெரிக்காவின் பரஸ்பர வரி நடவடிக்கையால் வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளா விய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சரியக்கூடும்.
ஏற்றுமதி இடம் மாறும்
இதைப்போல நாடுகளின் ஏற்றுமதியும் இடம் மாறும். எடுத்துக் காட்டாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மெக்சிகோ ஏற்றுமதியை சொல்லலாம். அந்தநாட்டின் ஏற்று மதியானது அமெரிக்கா, சீனா, அய்ரோப்பா மற்றும் லத்தீன் அமெ ரிக்கா போன்ற சந்தைகளில் இருந்து கனடா மற்றும் பிரேசிலுக்கும், குறைந்த அளவில் இந்தியாவுக்கும் மாறுகிறது.
இதைப்போல வியட்நாம் ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா சந்தைகள், அய்ரோப்பிய யூனியன், கொரியா உள்ளிட்டவற்றுக்கு மாறுகிறது.
அமெரிக்காவுக்கு இழப்பு
ஜவுளித்துறை வளரும் நாடுகளுக் கான பொருளாதார செயல்பாடு மற்றும் வேலை வாய்ப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கும் வங்காளதேசம் 37 சதவீத வரியை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் அமெ ரிக்காவுக்கு 2029-க்குள் 3.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.28 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும்.
பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அதைப்போல அமெரிக்காவும் பாதிப்பை எதிர் கொள்ளும்.இவ்வாறு பமீலா கோக் ஹேமில் டன் கூறினார்.