‘‘திராவிடம் போராடும், திராவிட மாடலே வெல்லும்!’’ சிறப்புச் சொற்பொழிவு

2 Min Read

கும்பகோணம், ஏப்.10 கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் ‘‘பெரியார் பேசுகிறார்‘‘ தொடர் கூட்டம் – 7 மற்றும் ஆடிட்டர் சண்முகத்திற்கு தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் ‘பகுத்தறிவுச் செம்மல்’’ விருது வழங்கும் விழா கும்பகோணம் பெரியார் மாளிகையில் 29.03.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்குக் கழக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி ஆறுமுகம் தலைமை வகித்தார். கழக மாவட்ட தலைவர் கு.நிம்மதி, தஞ்சாவூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் பழ. அன்புமணி, தி.மு.க. அயலக அணியின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் துபாய் மூர்த்தி , தமிழாய்வு அறக்கட்டளையின் கும்பகோணம் பொறுப்பாளர் பேராசி ரியர் உ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கழக தொழிலாளர் அணி மாவட்ட துணைத் தலைவர் நா. சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.

தொடக்க உரையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையினுடைய துணை அமைப்பாளர் டி. எம். முபாரக் உசைன் “திராவிடம் போராடும்…. திரா விட மாடலே வெல்லும்” என்னும் தலைப்பில் சிறப்பானதொரு சொற்பொழிவு ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள் பற்றி மாவட்ட தலைவர் கு.நிம்மதி, துபாயில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எப்படி கொண்டாடினோம் என்பது பற்றி துபாய் மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் சண்முகத்திற்கு கும்பகோணம் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் ‘‘பகுத்தறிவுச் செம்மல் விருது’’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

ஏற்கெனவே கும்பகோணம் தமி ழாய்வு அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்து விட்டது. அதில் பேரா.சேதுராமனுக்கு விருது வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த நிகழ்வில் விருதினை நேரில் பெற்றுக் கொள்ள இயலாத சூழலில் ஆடிட்டர் சண்முகம் இருந்த படியால் இன்று இக்கூட்டத்தில் அந்த விருந்தினை வழங்குவதாக பேராசிரியர் உ. பிரபாகரன் விருது பற்றி எடுத்துரைத்து ,அந்த விருதை ஏன் இருவருக்கும் வழங்கினோம் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செய லாளர் வி.மோகன் ஆடிட்டர் சண்மு கத்திற்கு விருதினை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக பேராசிரியர் உ. பிர பாகரன் விருது பெறும் ஆடிட்டர் சண்முகத்திற்கு கும்பகோணம் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
அடுத்த நிகழ்வாக “ஆரியர் சூழ்ச்சிப் பின்னல்களும்…. ஆசிரியரின் எழுச்சி மின்னல்களும் ……” என்னும் தலைப்பில் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை .புலிகேசி தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை ஆரியர் சூழ்ச்சிகளையும், அவை எப்படி எல்லாம் முறியடிக்கப்பட்டது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, இனி வருங்காலம் எப்படி இருக்கும், அதில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
நிறைவாக மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் திரிபுரசுந்தரி நன்றியுரை கூறிட கூட்டம் முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *