அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தனிப்பட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக, எடுத்த சில நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
இதனை எதிர்த்து அமெரிக்காவில் அனைத்துப் பெரு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.
இதன் காரணமாக டொனால்ட் டிரம்பிற்கு அவரது கட்சியின் செனட் மெம்பர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
இதனால் தனது தொழிலதிபர் நண்பர்களின் நலனுக்காக எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கேயும் மோடி தனது இரண்டு நண்பர்களுக்காக ஒட்டுமொத்த இந்தி யாவின் நலனையே அடகு வைக்கிறார்.
உலகத்தின் அனைத்து நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைந்துகொண்டு இருக்கும் போது, (இன்றுகூட ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 2% குறைந்துள்ளது) கச்சா இந்தியப் பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடி இழப்பைச் சந்தித்த தனது நண்பருக்காக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை ஏற்றி மக்கள் வயிற்றில் அடித்துள்ளார் மோடி.
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப்பும் – இந்தியாவின் நரேந்திர மோடியும்!

Leave a Comment