புதுடில்லி, ஏப்.8 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
வக்ஃபு வாரிய திருத்த சட்டம்
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் பட்டதை தொடர்ந்து, இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த 27 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட் டது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் கடந்த 6 ஆம் தேதி நடந்த அரசு விழாவின் போது அறிவித்தார்.
அதன்படி, வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வக்ஃபு மசோதா தொடர்பான நாடா ளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினருமான ஆ.இராசா எம்.பி. மூத்த வழக்குரைஞர் வில்சன் மூலம் உச்சநீதிமன்றத்தில் நேற்று (7.4.2025) மனு தாக்கல் செய்தார்.
அடிப்படை உரிமைப் பாதிப்பு!
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. அரசு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக, மேம்பாட்டுக் பொருளாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. முஸ்லிம் சிறுபான்மை சமூ கத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை மோச மாக பாதிக்கும் என்பதால் அதை திரும்பப் பெறு மாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமி்ழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27 ஆம் தேதி முதல மைச்சரால் ஒரு தீர்மானத்தை தி.மு.க. அரசு நிறை வேற்றியது.
வக்ஃபு திருத்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல எம்.பி.க்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாக கருத்தில் கொள்ளாமலும், இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றிட பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை.
வக்ஃபு திருத்த சட்டத்தால் முஸ்லிம் சிறு பான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடு மையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமையும் பாதிக்கும்.எனவே, வக்புவாரியதிருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும்….
இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது ஜாவீது, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆமானதுல்லாகான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய் துள்ளனர். இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் நேற்று (7.4.2025) முறையிட்டனர். இதனை ஏற்ற நீதிபதிகள், ரிட் மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.