மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தோழர் எம்.ஏ. பேபி (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கிறார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள்.
தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் கேரள அரசில் கல்வி அமைச்சராக இருந்து அரசியல் ஆளுமையும், அனுபவமும் உடையவர். மாணவப் பருவம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து பணியாற்றி வருபவர்.
புதிய பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
85 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு – முடிவுகளை மேற் கொள்ளும் அமைப்பு – அதில் தமிழ்நாட்டிலிருந்தும் தலைமைக் குழுவுக்கு தோழர்கள் பெ. சண்முகம், கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், கே.பாலபாரதி, என். குணசேகரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் வாழ்த்துகள்.
நாடு முக்கிய இலக்குடன் மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவத்திற்குப் போராடும் ஒரு முக்கிய கால கட்டத்தில் இத்தேர்வுகள் அதற்குப் பெரிதும் உதவிடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.4.2025