வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியா்கள் ஒன்றிய அரசு தகவல்

1 Min Read

புதுடில்லி, மார்ச் 21 வெளி நாடுகளில் எத்தனை இந்தியா்கள் சிறைகளில் உள்ளனா், அவா்களில் எத்தனை பேருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, இவா்களை காக்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற் சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் மாநிலங்களவையில் சமா்ப் பித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியி ருப்பதாவது:
வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள தரவுகளின்படி, வெளிநாடு களில் உள்ள சிறைகளில் விசா ரணைக் கைதிகள் உள்பட 10,152 இந்தியா்கள் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனா்.

மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள இந்தியா்களைப் பொறுத்தவரை அய்க்கிய அரபு அமீரகத்தில் 25 பேருக்கும், சவூதி அரேபியாவில் 11 பேருக்கும், மலே சியாவில் 6 பேருக்கும், குவைத்தில் 3 பேருக்கும், இந்தோனேசியா, கத்தார், அமெரிக்கா மற்றும் ஏமனில் தலா ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியா்களைக் காக்க ஒன்றிய அரசு உயா் முன்னுரிமை அளித்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் இவா்களுக்கு வழக்குரைஞா்களை நியமிப்பது உள்பட தேவையான அனைத்து சட்ட உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த வெளிநாடுகளில் இந்தி யா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவா், ‘மலேசியா, குவைத், கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் இந்தி யா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் குவைத், சவூதி அரேபியா நாடுகளில் தலா 3 இந்தியா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜிம்பாப்வேயில் ஒரு இந்திய ருக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. 2023-இல் குவைத், சவூதி அரேபியாவில் தலா 5 இந்தி யா்களுக்கும், மலேசியாவில் ஒரு இந்தியருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அய்க்கிய அரபு அமீரகம் தரப்பில் இதுகுறித்த தகவல் பகிரப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *