தலைநகர் டில்லியில் மதக்கலவரம்: பின்னணியில் பி.ஜே.பி.!

2 Min Read

புதுடில்லி, மார்ச் 21 கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி எதிர்க்கட்சியானது. இந்நிலையில், ஆட்சியில் அமர்ந்த ஒரே மாதத்தில் பாஜக மத வன்முறையை தூண்ட தீவிரமாக இறங்கியுள்ளது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான “சாவா” படத்தின் எதிரொலி என்ற பெயரில், டில்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயர்ப் பலகைக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் – விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் கருப்பு மை பூசி, மன்னர் மகாராணா பிரதாப்பின் புகைப்படத்தை ஒட்டினர். இதனால் டில்லியின் பெரும்பாலான இடங்க ளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை யாக வாழும் பகுதியான பழைய டில்லி, பல்லி மாரன், மதியா மஹால், ஓக்லா, முஸ்தபாபாத், சீலம்பூர், பாபர்பூர் ஆகிய பகுதிகளில் வன்முறை நிகழும் அளவில் பதற்றம் நிலவி வருகிறது.

வலுக்கும் கண்டனம்

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டில்லி முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான ரேகா குப்தா பதவியேற்றார். அவர் பதவி ஏற்று 30 நாட்கள் கூட தாண்டாத நிலையில், டில்லியில் மத வன்முறையை தூண்டும் வேலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் – விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் ஈடுபட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அக்பர் சாலையில் கருப்பு மை பூசிய அமித் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘அய்எஸ்பிடி காஷ்மீர் கேட்டில் நடந்த சம்பவத்தை டில்லி அரசும், காவல்துறையும் மூடி மறைக்க பார்க்கிறார்கள். அக்பர், பாபர் மற்றும் ஹுமாயூன் போன்ற படையெடுப்பா ளர்களின் அடையாள பலகைகளை நாங்கள் தொடர்ந்து அகற்றுவோம். மேலும் அரசாங்கத்தின் கண்களை திறந்து ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கிறோம்” எனக் கூறினார். அமித் ரத்தோர் இந்து ராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தலைவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *