சென்னை,ஜூலை 9 – முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட் டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்டி, எம்எஸ் படிப்புகள் உள் ளன. அதில் 1,050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படு கிறது. மீதமுள்ள 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் தொலைதூர கிராமப்புற மற்றும் மலைப் பகுதி களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மாண வர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 525 இடங்கள் இளநிலை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் 2023_-2024 கல்வியாண்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவர் களுக்கான ஒதுக்கீட்டில் சேரு வோர், முதுநிலைப் படிப்பை முடித்தபின், 5 ஆண்டுகள் கட் டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:
அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்து வம் படிக்கும் மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு, தனியா கவோ, தனியார் மருத்துவமனைகள் அல்லது வெளிநாடுகளுக்கோ பணியாற்ற செல்கின்றனர். அவர் களுக்கு அரசு ஒதுக்கிய இடங்கள் மற்றும் செலவு செய்த பணம் வீணாகிறது.
இவற்றை தடுக்க முதுநிலை படிப்பை முடித்தபின் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட் டாயம் பணியாற்ற வேண்டும் என விதி இருந்தது.
இது, இந்த ஆண்டு முதல் 5 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள் ளது. அவ்வாறு பணியாற்ற விரும் பாத டிப்ளமோ முதுநிலை மாண வர்கள், ரூ.20 லட்சமும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.40 லட்சமும் செலுத்திவிட்டு தாங்கள் விரும்பும் பணிக்கு செல்லலாம். இல்லையென்றால் சான்றிதழ் வழங்கப்படாது.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.