அய்தராபாத், மார்ச் 18 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக கட்சிகள் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவில் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏ.அய்.எம்.அய்.எம்., சிபிஅய், சிபிஅய்(எம்) கட்சிகள் பங்கேற்றன. பி.ஆர்.எஸ்., பாஜக கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.
வரும் 22 ஆம் தேதி சென்னை யில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ள கேரளா, கருநாடகா, தெலங்கானா முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.