புதுடில்லி, நவ.14 – பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயரிடப்பட்டிருப்ப தற்கு உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதுடன் ஹிந்தி மொழி பேசாத மக்களை அவமதிப்பதாகும் என மசோதா குறித்து அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, தனது வரைவு அறிக்கையை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரிடம் கடந்த வாரம் அளித்தது.
முன்னதாக, இந்த மசோதாக்களில் உள்ள சட்டவிதிகளுக்கு எதிராக அதீர் ரஞ்சன் சவுத்ரி, ப. சிதம்பரம், திக்விஜய் சிங், டெரிக் ஓபிரையன், தயாநிதிமாறன், என்.ஆர். இளங்கோ உள்பட 8 உறுப்பினர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் நிலைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன.
எண்களில் மாற்றம்
மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, ‘இந்த மசோதாக்கள் பெருமளவில் தற்போதைய சட்டங்கள் போன்றே உள்ளன. அவற்றில் உள்ள சட்டவிதிகளின் எண்கள் மாற்றி யமைக்கப்பட்டுள்ளன. மசோதாக்களின் தலைப்பு களுக்கு வேண்டுமென்றே ஹிந்தியில் பெயரிடப் பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார்.
‘புகழ்பெற்ற வழக்குரைஞர்கள், நீதிபதிகளை அழைத்து இந்த மசோதாக்கள் தொடர்பாக விவா திக்கவேண்டும். ஆனால், குழுத் தலைவர் அறிக்கையைச் சமர்ப்பிக்க அவசரம் காட்டுகிறார்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய சட்டங்களின் நகல்கள்
மேனாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த ஆட்சேபத்தில், ‘அரசமைப்புச் சட்டத் தின் பிரிவு-348, உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங் களில் பயன்பாட்டில் உள்ள ஆங்கில மொழியில் தான் அனைத் துச் சட்டங்களும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறது. மசோதாக்களுக்கு ஹிந்தி யில் பெயரிடப்பட்டிருப்பது அரசமைப்புச் சட் டத்துக்கு எதிரானது. தமிழர்கள், குஜராத் திகள், வங்காளிகள் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மக்களை அவ மதிக்கும் நடவடிக்கை இது. இந்த 3 மசோ தாக்களும் தற்போதைய குற்றவியல் சட்டங்களின் நகல்களாக உள்ளன’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
கூட்டாட்சி அமைப்பை மாற்றியமைக்கும்
இந்த மசோதாக்களில் மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன், ‘தற்போதைய குற்ற வியல் சட்டங்களின் 93 சதவீத பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
அவற்றில் உள்ள 22 அத்தி யாயங்களில் 18 அத்தியாயங்கள் எவ்வித மாற்றமுமின்றி அப் படியே இடம்பெற்றுள்ளன. இந்த மசோதாக்கள் குறித்து போதிய ஆலோசனை நடத்தப்பட வில்லை’ என்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள் ளார்.
இந்த மசோதாக்கள் கூட்டாட்சி முறையிலும், ஓன்றிய -மாநில அரசுகள் இடையிலான ஒழுங் கமைவிலும் மாற்றத்தை ஏற்படுத் தும் என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.