கோரக்பூர், மார்ச் 15- வண்ணங் களின் விழாவான ஹோலி கொண்டாடிக் கொண்டு வரும் சூழலில் உத்தரப்பிரதேச மீன் வளத்துறை அமைச்சரும், நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அவர் கூறுகையில், ‘வெள்ளிக் கிழமை தொழுகையின் போது மக்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவுகிறார்கள்.
அதைத்தான் ஹோலி கொண்டாட்டங்களிலும் மக்கள் செய்கிறார்கள்.
இரு விழாக்களும் ஒன்றி ணைப்பை வலியுறுத்துகின்றன. ஆனால் சில அரசியல்வாதிகள் இந்த ஒற்றுமையை விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மக்கள் மனதில் விஷம் பூசி தவறாக வழி நடத்துகிறார்கள். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்களுக்கு வண்ணங்களில் பிரச்சினை இருந்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண் டும்’ என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.