புதுடில்லி, மார்ச் 14 “தேர்வு வினாத்தாள் கசிவால் 6 மாநிலங்களில் உள்ள 85 லட்சம் மாணவர்களின் எதிர் காலம் ஆபத்தில் உள்ளது” என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித் துள்ளார்.
வினாத்தாள் கசிவு
இதுகுறித்து அவர் கூறியி ருப்பதாவது:
மருத்துவ மாணவர்களுக் கான இளநிலை நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு உள்பட ஒன்றிய, மாநில அரசுகள் நடத் தும் தேர்வுகளின் வினாத் தாள்கள் தொடர்ந்து கசிந்து வருவது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசை கடுமை யாக விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் தள பதிவில், “இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் 6 மாநிலங்களில் உள்ள 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
வினாத்தாள் கசிவு மாணவர் களுக்கு ஏற்பட்டுள்ள மிகவும் ஆபத்தான சக்ர வியூகம். வினாத் தாள் கசிவு கடினமாக படிக்கும் மாணவர்கள், அவர்களின் குடும்பத் தினருக்கு நிச்சயமற்ற தன்மையை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் கடின உழைப்பின் பலன்களையும் பறிக்கிறது. மேலும் கடின உழைப்பிட நேர்மையற்ற வழியே சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறைக்கு கடத்து கிறது. இது சிறிதும் ஏற்று கொள்ள முடியாதது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாட்டையே உலுக்கி ஒரு ஆண்டுகூட ஆக வில்லை.
இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து ஒன்றிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து, அதுவே தீர்வு என்று அந்த சட் டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ஆனால் தொடரும் வினாத்தாள் கசிவுகள் அரசின் தோல்வியை நிரூபித்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக இணைந்து செயல்படும் போதுதான் வினாத்தாள் கசிவு ஒழிக்கப்படும். இந்த தேர்வுகளின் நேர்மை, கண்ணியம் நம் குழந்தைகளின் உரிமை. எந்த விலை கொடுத்தேனும் அந்த கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.