அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு : போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதம் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஒப்புதல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், மார்ச் 13 சவுதி அரேபி யாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான்’’ என அமெரிக்கா கூறியுள்ளது.

அமைதிப் பேச்சு வார்த்தை

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது. உக்ரைனுக்கு ஆயுத உதவியை உடனடியாக நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமைதி பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எப்போது வேண்டு மானாலும் வரலாம் என கூறினார்.

போர் நிறுத்தம்

இதையடுத்து சவுதி அரேபியாவில் உக்ரைன் குழுவினருடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியும் சவுதி அரேபியா சென்றிருந்தார். அப்போது அமெரிக்கா தெரிவித்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ‘‘போர் நிறுத்தம் செய்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி இந்த விஷயத்தை நாங்கள் ரஷ்யாவிடம் கொண்டு செல்வோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துக் கொள்வர் என நம்புகிறோம்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *