மத்தூர், மார்ச் 11- கிருட்டினகிரி மாவட்டம் மத்தூரில் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் தொண்டற செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மு.இந்திரா காந்தி தலைமை தாங்கினார்.
திராவிடர் கழக மகளிரணி மாநிலப் பொருளாளர் அகிலா எழிலரசன் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து அம்மாவின் தியாகம், வீரம், ஆளுமை, திறன் குறித்து சிறப் புரை ஆற்றினார். அம்மாவின் பிறந்தநாளே நம் மகளிருக்கு மகளிர் விடுதலை நாள் – இந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி அம்மாவின் நினை வைப் போற்றுவோம் என்று கூறினார்.
திராவிடர் கழக சொற்பொழி வாளர் பழ.வெங்கடாசலம் அம்மாவின் செயல்பாடு குறித்தும் மிசா காலத்தில் அம்மா வின் செயல்பாடு குறித்தும் திராவிடர் கழகத்தின் தேவை குறித்தும் தந்தை பெரியார் பணி குறித்தும் உரையாற்றினார். கிருட்டினகிரி மாவட்ட கழக தலைவர் கோ.திராவிட மணி, மாவட்டச் செயலாளர் செ. பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம் திருப்பத்தூர் கழக மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், கவிஞர் நா.சுப்புலட்சுமி, கோ.சுமதி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மத்தூர் ஒன்றிய தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட ப.க செயலாளர் க.வெங்கடேசன், ஊத்தங்கரை ஒன்றிய பக தலைவர் இராம. சகாதேவன், ஒன்றிய தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றிய செயலா ளர் சிவராஜ், மகளிரணி பொறுப்பாளர் முருகம்மாள், மத்தூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர்கள் சிவசக்தி, முருகம்மாள், காயத்திரி, கலா, சுதா, பப்பி வசந்தி பர்கூர் ஒன்றிய பொறுப்பாளர் ரகுநாத் குடும்பத்தினர், திருப்பத்தூர் நகரத் தலைவர் காளிதாஸ், மத்தூர் ஒன்றிய இளைஞரணி ராமஜெயம், ராஜீவ் காந்தி, கந்திலி ஒன்றிய தலைவர் கனகராஜ், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர் கற்பகவல்லி, மத்தூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ் குடும்பத்தினர், திருப்பத்தூர் மகளிரணி புவனா, சிவகாமி கல்லூரி மாணவிகள் ரம்யா மற்றும் ஏராளமான பெரியார் பிஞ்சுகள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்
நிறைவாக மாநில திராவிட மாணவர் கழக துணை செயலா ளர் அ.மணிமொழி நன்றி கூறினார்.