வள்ளியூர், மார்ச் 11- 10.3.2025 அன்று மாலை 6 மணிக்கு வள்ளியூரில் அன்னைமணியம்மையார்106 ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் 72-ஆவது பிறந்தநாள் விழா, மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்’ என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் பரபரப்புடன் நடைபெற்றது. திராவிடர்கழகமாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார்.
கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் நடுவராக பொறுப்பேற்று உணர்ச்சி பூர்வமான உரையாற்றினார்.
உரிமை பறிப்பு என்ற தலைப்பில் இரா.பெரியார் செல்வன், ஹிந்தி திணிப்பு என்ற தலைப்பில் இராம. அன்பழகன், நிதி மறுப்பு என்ற தலைப்பில் ஆரூர்.தேவ.நர்மதா ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினார்கள்.
ஒவ்வொருவரது பேச்சினையும் மக்கள் கரவொலி எழுப்பிவரவேற்று மகிழ்ந்தனர்.
கழக பொதுக்குழு உறுப்பினராக தமிழர் தலைவரால் நியமிக்கப்பட்ட ந.குணசீலனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திமுக நகரசெயலாளர் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், தொழிலதிபர் இராதாகிருட்டிணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேசு, மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகம், மாவட்டதுணைச்செயலாளர் மாரி.கணேசு, சேரன்மகாதேவி ஒன்றிய கழக தலைவர் கோ. செல்வ சுந்திரசேகர், வீரவநல்லூர் கழகத் தலைவர் மா.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பா ளர்கள் அய்யாதுரை, துணைச் செயலாளர் முருகேசன், உள் ளிட்ட ஏராளமான தோழர்கள் பங் கேற்று சிறப்பித்தார்கள்.
வள்ளியூர் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் சு.வெள் ளைப்பாண்டி, பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் இ.மோகன சுந்தர், நகர கழக செயலாளர் பெ.நம்பிராசன் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.