புதுடில்லி, மார்ச் 10- நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இன்று (10.3.2025) தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் இருக்கையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடி யாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்கு கூச்சல் எழுப்பினர், இருப்பினும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை (ஹிந்தி) திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்றவற்றை முன்னெடுத்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். திமுக உறுப்பினர்களின் முழக்கத்திற்கிடையே அவை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூற கனிமொழி எம்.பி. அதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க அமைச்சர் கூறிய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
ஹிந்தி திணிப்பு நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முற்றுகை

Leave a Comment