கும்முடிப்பூண்டி, மார்ச் 10- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி கலைஞர் அரங்கில் 09/03/25 அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்ரவர்த்தி தலைமையில் கடவுள் மறுப்பு கூறி தொடங்கியது, இக்கூட்டத்தில் பொன்னேரி நகர தலைவர் வே. அருள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொன்னேரி கார்த்திக்,தோழர் செல்வராஜ் ஆகியோர் கருத்துக்களைகளைத் தொடர்ந்து மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ் நோக்க உரையாற்றி போது இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் இளைஞரணி செயல்பாடு எப்படி இருக்கவேண்டும்,ஆசிரியர் வெளிநாட்டில் இருந்தாலும் நம்முடைய செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார் என்று தொடங்கி, சிதம்பரம் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கி தெருமுனை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று மிக சிறப்பாக பேசினார். இறுதியாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியபாளையம் அ. ஆகாஷ் நன்றியுரை கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்கள்,,
கும்முடிப்பூண்டி மாவட்ட கழக செயலாளர் ஜெ. பாஸ்கரரின் தாயாரும், மாவட்ட கழக துணைத் தலைவர் ராஜசேகர் அவர்களின் மாமியாரும், மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் வேணியின் தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிதம்பரத்தில் 15.02.2025 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கியும், சென்னை கொளத்தூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தந்தை பெரியார் அரசு பொது மருத்துவமனை என்று பெயர் சூட்டிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு எனும் பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினை மிகக்கடுமையாக கொள்கை ரீதியாகவும், அரசியல் களத்தில் எதிர்த்து களமாடும் திராவிட மாடல் அரசிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், செம்பேடு, கும்முடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு ஆகிய ஏழு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.