தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கந்தர்வகோட்டை, மார்ச்5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி அறிவியல் கண்காட்சிக்கு நடுவராக செயலாற்றினார். இந்நிகழ் வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து தேசிய அறிவியல் தினம் குறித்து பேசினார்.

மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் தங்களுடைய படைப்புகளை சமர்ப்பித்தனர். அறிவியல் பாடல்கள் ரியா மேரி நித்யசிறீ கிருஷ்டிகா தரணிகா உள்ளிட்டோர் அறிவியல் பாடலின் தலைப்பில் பாடல்கள் பாடினார்கள். சிவானி சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக்கூடிய வகையில் உறுதி மொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஆங்கில ஆசிரியர் சிந்திய, அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் மணி மேகலை, வெள்ளைச்சாமி, ஹில்டா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங் கினார்கள். கல்வி வானொலியில் கலந்துகொண்டு தேசிய அறிவியல் தினம் குறித்து பேசிய மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *