பெல்லம்பள்ளி, மார்ச் 3 ‘‘புலே, சாவித்திரிபாய் புலே, பெரியார் ராமசாமி போன்ற பெருமக்கள் ஆற்றிய சேவைகள் நினைவுகூரத்தக்கவை‘‘ என்று விஞ்ஞானி தர்சினி ரமேஷ், பேராசிரியர் பாலபோயினா சுதர்சன் கூறினர்.
தேசிய அறிவியல் நாளையொட்டி, பெல்லம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரிகள் முன் முப்பெருமக்களின் சிலைகள் 28.2.2025 அன்று திறக்கப்பட்டன. பின்னர் சமூக சேவகர் ரங்கபிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மகளிர் நலச் சங்கம் மாவட்ட அதிய க்ஷுருளா ஏற்ற சுவர்ணா, கவிஞரும் எழுத்தாளருமான தோட்ட பூ மன்னா, தெலங்கானா எழுத்தாளர் மன்றத் தலைவர் தோகல ராஜேஷ், அரசு பட்டப்படிப்பு கல்லூரி முதல்வர் கம்பள்ளி சங்கர், நல குருகுல சிஇஓ கல்லூரி முதல்வர் டி.சிறீதர், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் உதா யகாந்த், விடுதி நல அலுவலர்கள் சரிதா, விஜயலட்சுமி, சிலை நிறுவும் குழுத் தலைவர், செயலாளர்கள் ஜி.சிறீஅரி, சிறீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.