USAID அமெரிக்க வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90 சதவீதம் குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டுகிறார். கடந்த 2023இல் ஆட்சியில் வெளிநாட்டு நிதியுதவிக்கு இந்திய மதிப்பில் ரூ.5.17 லட்சம் கோடி (60 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிதியை முடக்கினார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 பேரை நீக்கம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.