வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் பரிதாப நிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம்

2 Min Read

புதுடில்லி, மார்ச் 1- ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் மும் மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் அரசு பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. ஆங்கிலமும், ஹிந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.

உருது, சமஸ்கிருதம் மட்டுமே…

புதிய கல்விக் கொள்கை 2020இல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை மூன்றாவதாக போதிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக உருது அல்லது சமஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்படுகின்றன. இவற்றில் உருதுவை முஸ்லிம்களும், சமஸ்கிருதத்தை முஸ்லிம் அல்லாத வர்களும் பயில்கின்றனர்.
டில்லி, அரியானாவின் அண்டை மாநிலமாக பஞ்சாப் இருப்பதால் அதன் பஞ்சாபி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகராட் டிராவின் அரசு பள்ளிகளில் உருது மற்றும் சமஸ்கிருதத்துடன் தென்னிந்திய மொழிகளும் போதிக் கப்படுகின்றன. இதில், தமிழ், கன்னடம், மராத்தி, மலை யாளம் இடம் பெற்றுள்ளன.
கேரளா, மகராட்டிரா, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சில தென்னிந்திய மொழிவழிக் கல்வி பள்ளிகளும் உண்டு.
பெயரளவில் மட்டுமே

3ஆவது மொழித் தேர்வு

வடமாநிலங்களின் மூன்றாவது மொழியில் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை. இதற்காக, உருது அல்லது சமஸ் கிருதத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண்கள், ஹிந்தியுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இவ்வாறு பெரும்பாலான வட மாநிலங்களில் மூன்றாவது மொழித் தேர்வை பெயரளவில் நடத்துவதாகப் புகார் உள்ளது. இப்புகாருக்கு காரணம் அந்த அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையே.

வட இந்தியாவின் பெரும் பாலான அரசு பள்ளிகளில் ஹிந்தி மொழி ஆசிரியரே சமஸ்கிருத பாடத்தையும் நடத்துகிறார். ஏனெனில், சமஸ்கிருதம் ஹிந்திக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. உருது மொழி ஆசிரியர்களும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இல்லை. இதற்காக, உருது பாடம் போதிப்பதற்கு அருகிலுள்ள முஸ்லிம் மதரஸாக்களுக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதையே காரணமாக்கி பல மாநில அரசுகள் மூன்றாவது மொழிக்கான ஆசிரியர் களை நியமிக்காத நிலையும் உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) இதர மொழிகளுக்கு வாய்ப்பு இருந்தும் வட மாநில அரசுகளும், மாணவர்களும் ஹிந்தி, சமஸ்கிருதத்தையே விரும்பு கின்றனர். ஒன்றிய அரசு சமக்கிரு சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் பள்ளிகளின் அனைத்து செலவுகளுக்கும் நிதி வழங்குகிறது. இதில் ஆசிரியர்களை நியமிக்க ஏற்படும் நிதிச் சிக்கல்களை தெரிவித்தால் அதற்கான தீர்வு காணப்படும்’’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *