ஆக்ரா, நவ.15 பாலியல் வன் கொடுமைக்கு ஆளான சிறுமியை “வழக்கை திரும்பப் பெற்றுவிட்டு செத்துப்போ” என்று குற்றவாளி மிரட்டியதால் அந்த சிறுமி தற் கொலை செய்துகொண்டார்.
வட மாநிலங்களில் அதிலும் சாமியார் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நாள்தோறும் பாலியல் வன்கொடு மைகளும், கொலைகளும் மிகச் சாதாரணமாக நடந்து வருகின்றன.
ஆக்ரா விடுதியில்…
தீபாவளிக்கு முதல் நாள் ஆக்ராவில் உள்ள பிரபல விடுதியில் பகலில் அனைத்து கண்காணிப்பு நிழற்படக் கருவிகளுக்கு முன்பா கவே வரவேற்பாளராக பணியில் இருந்த இளம்பெண்ணை அதே விடுதியில் தங்கி இருந்த 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தப்பெண் விடுதிப் பணியாளர் களிடம் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபோது அந்தப் பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்த நபர்கள் செல்வாக்கு உள்ள நபர்கள் என்பதால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
விடுதியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் விடுதியில் உள்ள யாருமே காவல்துறைக்கும் புகார் அளிக்க வில்லை. இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் வெளியான பிறகு காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்தது.
முசார்பர் நகரில்….
அதே போன்று உ.பி. மாநிலம் முசார்பர் என்ற இடத்தில் வயலில் வேலை செய்து கொண்டு இருந்த சிறுமி அந்த வயலின் உரிமையா ளரால் பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டார். இதனை அடுத்து அந்தச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர்.
காவல்துறையினர் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணைக்கு வருமாறு குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
மேலும் புகார் அளித்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லாமல் ஆள் இல்லை என்று கூறி தாமதப்படுத் தினர். விசாரணைக்கு வந்த குற்ற வாளி காவல்நிலையத்திலேயே தன் னால் பாலியல்வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டியுள் ளார். இந்த நிலையில் குற்றவாளியை சாதாரண வழக்கில் பதிவு செய்த தால் உடனடியாக குற்றவாளிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது
இதனை அடுத்து குற்றவாளி நேராக சிறுமியின் வீட்டிற்குச் சென்று காவல்நிலையத்தில் “என்மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற் றுக்கொண்டு தற்கொலை செய்து கொள்! இல்லையென்றால் உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன்” என்று மிரட்டி தான் கொண்டுவந்த பூச்சிமருந்து பாட்டிலை சிறுமியின் வீட்டில் வைத்து விட்டுச் சென்று விட்டார். காவல்துறையும் புகாரை மெத்தனமாகக் கையாண்டது. குற்ற வாளி வீட்டிற்கே வந்து குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் வேறு வழியில்லாமல் அந்தச்சிறுமி குற்றவாளி கொடுத்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக, காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது “ஜின்ஜானா காவல் நிலைய எல் லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தந்தை தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் தனர். ஆனால் குற்றவாளிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது இந்த நிலையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அடுத்து குற்றாவளிமீது தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.