மோடி அரசின் பாராமுகம்

2 Min Read

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கனிமொழி எம்.பி.,  அஜய் மக்கான் பங்கேற்பு

அரசியல்

புதுடில்லி,ஜூலை12– மாற்றுத் திறனாளிகள் குரலுக்கு செவி மடுக் காமல் 11 ஆண்டுகளாக  மாதம் ரூ.300 மட்டும் வழங்கிவரும்  ஓய்வூ தியத்தை  ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடில்லியில் 10.7.2023  அன்று   ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

கனிமொழி எம். பி., மேனாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பேசினர்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திரா காந்தி ஓய்வூதியமாக வழங்கும் மாதம் ரூ.300 என்பதை ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016அய் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

பல்நோக்கு அடையாள அட் டையை (யுடிஅய்டி), முகாம் நடத்தி நாடு  முழுவதும் சீராக வழங்க வேண்டும். அதுவரை பயன் கள் பெற யுடிஅய்டி-யை நிபந்தனை ஆக்கக் கூடாது.

100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். தகுதியு டைய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.

வேலை நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புது டில்லி ஜந்தர்மந்தரில்    ஆயிரக்கணக் கான மாற்றுத் திறனாளிகள் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்பிஆர்டி என்னும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் நடந்த இப்போராட்ட த்தில் தமிழ்நாடு, கேரளா,  கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா,  உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் பங்கேற்றனர்.

சங்கத்தின் அகில இந்திய தலை வர் கிரீஷ் கீர்த்தி தலைமை வகித் தார்.  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மேனாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், மாற் றுத் திறனாளிகள் உரிமைகளுக் கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, பொதுச் செயலாளர் வி.முரளீதரன்,  நிர்வாகி கள் ஜான்சிராணி, அனிபென் முகர்ஜி,  ரிஷிகேஷ் ரஜளி, அதுவய்யா, கைரளி, அகில இந்திய விவ சாயிகள் சங்க மதிப்புறு தலைவர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சோனியா, இந்திய மாணவர் சங்க  தலைவர் ஆதர்ஷ், மாற்றுத்திற னாளிகள் தேசிய ஒருங்கிணைப்புக்குழு தலை வர் அர்மன் அலி உள்ளிட்டோர் பேசினர். 

டில்லியில் பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தா மல் ஆயிரக்கணக்கான மாற்றுத் திற னாளிகள் பங்கேற்று முழக்கமிட் டனர்.

மழை குறுக்கிட்ட போதிலும் நனைந்தபடியும் குடையைப் பிடித் துக்கொண்டும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *