சென்னை,பிப்.26- தமிழ்நாடு முழுவதும் 1000 முதலமைச்சர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும். அதன்மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் சவுந்தரபாண்டியனார் அங்காடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். பின்னர் நோயாளிகளுக்கான மருந்துகள் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
தொழில் முனைவோர்
இதே போன்று தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சாவூரில் 40, சென்னையில் 33, திருநெல்வேலியில் 31 என தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11-க்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்…
சென்னையில் 39 இடங்களில் முதல்வர் மருந்தகம்: பற்றிய விவரம் வருமாறு:-
* கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.
* ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.
* மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.
* திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.
* கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.
* காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்.
* கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.
* நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.
* கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.
* சாமியர்ஸ் சாலை, நந்தனம்.
* லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.
* காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி.
* வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.
* மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.
* நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.
* சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.
* லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
* செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.
* பாரதிநகர் 2ஆவது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,பல்லாவரம் தாலுகா.
* சாந்திநகர், 3ஆவது தெரு, குரோம்பேட்டை.
* மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பேருந்து நிலையம்.
* புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.
* வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.
* பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.
* காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.
* 10ஆவது பிளாக், கிழக்கு முகப்பேர்.
* வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.
* 15ஆவது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.
* 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.
* 4ஆவது பிரதான சாலை, அயனப்பாக்கம்.
* துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.
* 3ஆவது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.
* பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.
* 2ஆவது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.
* ஆண்டியப்பன் தெரு, புதுவண்ணை.
* 8ஆவது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.
* பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.
* பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணை,பெரியார் நகர், கொளத்தூர்.
* தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.