கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

25.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஹிந்தி திணிப்பு எதிரொலி: சென்னையில் சில அஞ்சல் அலுவலகம், பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகங்களில் ஹிந்தி பெயரை திமுகவினர் அழிப்பு.
* ‘‘ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின் படி, கடந்த நிதியாண்டில் யுஎஸ்எய்டு அமைப்புடன் இந்திய அரசு 7 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களில் எதுவும் தேர்தலுடன் தொடர்புடையது கிடையாது. இதன் மூலம் பாஜகவின் முழு பொய்யும் அம்பலமாகி உள்ளது” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு.
* குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் 1000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: கல்வியும், மருத்துவமும் எனது இரு கண்கள் என பேச்சு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பணமதிப்பிழப்பு, கோவிட்-19 ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய மக்களின் நிலை குறித்து அறிந்திட மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடி தேவை என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல்கள் நெருங்கும்போது, மோடி பீகாரிகள், சத்தீ மையா, லிட்டி சோக்கா பற்றி கவலைப்படுவார். ஆனால் அவரது கூட்டணி பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகும், “வறுமை மற்றும் வேலையின்மையில் முன்னணியில் உள்ளது”. பீகாரில் விவசாயிகளின் வருமானமும் எழுத்தறிவு விகிதமும் நாட்டிலேயே “குறைவாக” இருப்பது ஏன் என தேஜஸ்வி கேள்வி.
தி இந்து:
* யுஜிசியின் அதிகாரம் கல்வி நிலையை உயர்த்துவது தான், கழுத்தை நெரிப்பது அல்ல என்கிறார் திருவனந்தபுரம் மேம்பாட்டு ஆய்வு மய்த்தின் கவுரவ வருகை பேராசிரியர் புலப்ரே பாலகிருஷ்ணன்,
தி டெலிகிராப்:
* டில்லி காவல்துறை அத்துமீறல்: சிபிஅய் எம்எல் லிபரேஷன் உடன் இணைந்த அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (ஏஅய்சிசிடியு) டில்லியில் நடத்திய மாநாடு அரங்கத்தின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த பாலஸ்தீனம் மீதான தாக்குதல், சிறுபான்மையினருக்கு எதிராக ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ‘வெறுப்பு குறித்த பதாகைகளை காவல்துறை அகற்றியது.
.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *