‘செம்மொழி’ சமூக, இலக்கிய இதழின் ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” எனும் நூலை நேற்று (22.2.2025) சென்னை மயிலாப்பூர், சிஅய்டி காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் பெற்றுக் கொண்டார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி என். சிவா நூல் குறித்து உரையாற்றினார். நூல் ஆசிரியர் இலியாஸ் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள் இலியாஸ் குடும்பத்தினருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.