தமிழ்நாட்டில் முதன் முதலாக வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
வெம்பக்கோட்டை,பிப்.23- அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தற்போது வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய், சங்கு பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ஆம் கட்டமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்க ஆபரணங்கள், சூது பவள மணி, காளை உருவ பொம்மை, சங்கு வளையல்கள், செப்பு காசுகள், சுடுமண் முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
தற்போது 24.9 மி.மீ. நீளமும், 12.6 மி.மீ. விட்டமும், 6.68 கிராம் எடையும் கொண்ட சங்கினால் செய்த பழங்கால பதக்கமும்27.7 மி.மீ. உயரமும், 25.5. மி.மீ விட்டமும் கொண்ட சுடுமண்ணால் செய்த ஆட்டக்காய் ஒன்றும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் முதன்முறையாக சங்கு பதக்கம் கிடைத்துள்ளது.
தொல்லியல் துறையினர்
“பழங்காலத்தில் வீரத்தை போற்றும் விதமாகவோ, போட்டியில் வென்றதற்கு அடையாளமாகவோ, ஒருவரை கவுரவிக்கும் விதமாகவே இதுபோன்ற சங்கு பதக்கங்களை அணிவிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், இது தமிழர் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்ப்பதாகும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.