அறிவியல் குறுஞ்செய்திகள்

அய்க்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சாரத் திட்டம் வர உள்ளது. இது இரவு, பகல் என இரண்டு வேளைகளிலும் வேலை செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிக்க, பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தி 5.2 ஜிகாவாட் மின்சாரமாக இருக்கும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் 7.5 லட்சம் வீடுகளுக்குப் போதுமானது. அமெரிக்க ஆற்றல் துறை தரும் தகவலின்படி 1 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 18.87 லட்சம் சூரிய மின்தகடுகள் தேவை. ஆகவே, 5.2 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்கு 1 கோடி தகடுகள் தேவைப்படும்.

நம் பூமியில் இருந்து 520 கி.மீ., துாரத்தில் உள்ளது WASP-127b எனும் வாயுக்கோள். இது 2016ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது இந்தக்கோள் தன் நட்சத்திரத்தைக் கடந்து சென்றது. ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை கண்காணித்தனர். இந்தக் கோளின் வளிமண்டலத்தில் கார்பன் மோனோ ஆக்சைடும், நீராவியும் உள்ளதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மணிக்கு 33,000 கி.மீ., வேகத்தில் இந்தக்கோளில் புயல் வீசிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கோள் தன்னைத்தானே சுற்றும் வேகத்தைவிட புயலின் வேகம் ஆறு மடங்கு அதிகம்.

செயல்படும் எரிமலைகளுக்கு (Active volcano) அடியில் மட்டுமே தீக்குழம்பு இருக்கும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலை. மேற்கொண்ட ஆய்வில் துாங்கும் எரிமலைகளுக்கு (Dormant volacano) அடியிலும் தீக்குழம்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அடிக்கடி மாறுகிறதோ அவர்களுக்கு டிமென்ஷியா எனும் மறதிநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *