கும்பமேளா பல விசித்திர நகைச் சுவைகளை பார்க்கும் இடமாக மாறிவிட்டது, மதியிழந்தவர்கள் இத்தனைக் கோடி பேரா என்று வியக்க வைக்கிறது. இந்த வகையில் பிரயாகைக்குப் போகும் பாதையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி மக்கள் திரிவேணி சங்கமத்திற்குப் போகும் பாதையாக திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை ஒரு கும்பல் பாபாகி பூல்(மேம்பாலச் சாமியார்) என்று பெயர் வைத்து ஆங்காங்கே சில சாமியார்களின் படங்களை ஒட்டி வைத்துள்ளனர் செல்லும் மக்கள் அனைவரும் மேம்பாலத்தை வணங்கி அங்கு வைத்துள்ள உண்டியல்களில் காசு போட்டுச்செல்கின்றனர்.