பாளம்புத்தூர், பிப். 16- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ‘‘தந்தை பெரியார் கண்ட போர்க்களம்’’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் பாளம்புத்தூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் 13.02.2025 மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம் தலைமையிலும், தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய துணை தலைவர் கு. நேரு, பாளம்புத்தூர் திமுக மேனாள் கிளை கழக செய லாளர் எஸ்.ராமலிங்கம், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரைக்கோட்டை மதியழகன், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராமசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று திமுக மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு உரையாற்றியனார். பாளம்புத்தூர் திமுக மேனாள் கிளை கழக செயலாளர் S.ராமலிங்கம், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரைக்கோட்டை மதியழகன், ஒன்றிய துணை தலைவர் கு. நேரு, தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம் ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தந்தை பெரியாரை பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றி யும், ஆசிரியருக்கு மெய்க்காப்பாளராகவும், ஓட்டுநராகவும் செயல்படும் அசோக்குமார் நம்முடைய பாளம்புத்தூர் கிராமத்தில் இருந்து வந்து, சென்னையில் சிறப்பாகப் பணி செய்வதை பற்றி உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் மன்னை. இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பாளம்புத்தூர் கிராம நிர்வாகிகள் ஒன்றி யக் குழு உறுப்பினர் பிரியா இளந்தமிழன், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் ஓட்டுநர் அசோக்குமார், அவரின் சகோதரர்கள் முருகேசன், சிவசாமி, திமுக நிர்வாகி விசுவநாதன், சண்முகம், சோமன், நடராஜன், சிவசாமி, சின்னத்தம்பி, திமுக மேனாள் கிளை கழக செயலாளர் ஒப்பந்தக்காரர் கண்ணன், புவனராஜ், தெலுங்கன்குடிக்காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, திராவிடர் கழக நிர்வாகிகள் பொறியாளர் பாலகிருஷ்ணன், மாணிக்கவாசகம், தஞ்சை. அ. பெரியார்செல்வன், நெடுவாக்கோட்டை கிளை கழக செயலாளர் லெனின், வன்னிப்பட்டு கிளை கழக செயலாளர் செந்தில்குமார், ஒக்கநாடு மேலையூர் கிளை கழக செயலாளர் வீரத்தமிழன், ஒக்கநாடு மேலையூர் தன்மானம் உள்ளிட்ட கழக தோழர்களும் திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பொதுக்கூட்டத்தினை தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓட்டுநர் அசோக்குமார், அவரின் சகோதரர்கள் முருகேசன், சிவசாமி, திமுக மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.
நிறைவாக உரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.