இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இப்படி ஓர் அறிவிப்பு!

2 Min Read

இந்தியா – சீனாவை எச்சரிக்கும் டிரம்ப்: 100 சதவிகிதம் வரி விதிப்பேன்

வாசிங்டன், பிப்.14 பன்னாட்டு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பாகும்.

இரண்டு முக்கிய அறிவிப்புகளை…

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்பரோக்கல் வரிகளை விதிக்கும் கொள்கையில் கையெழுத்திட்ட அதிர்ச்சி இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும் என தெரியாத நிலையில், இந்தியா உறுப்பினராக இருக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவும் பிரதமர் மோடியை அமெரிக்காவில் வைத்துக்கொண்டு அடுத்த சில மணிநேரத்தில் இருவரும் சந்திக்க உள்ள வேளையில் 2 முக்கிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு மத்தியிலான வர்த்தகத்திற்குச் சொந்தமாக ஒரு நாணயத்தை பயன்படுத்தவும், டாலரை நம்பி செயல்பட கூடாது என்ற முக்கிய இலக்குடன் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால், உண்மையில் பிரிக்ஸ் நாணயம் என்ற யோசனைக்கு எந்த நாடும் முன்வைக்கவில்லை, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தற்போது அந்தந்த நாட்டு வர்த்தகத்திற்கு அதன் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதி லேயே கவனம் செலுத்தப்படுகிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு பெரும் சக்தியாக மாறி வரும் வேளையில், அமெரிக்க அரசும், அதிபர் டிரம்ப்பும் தேவையில்லாமல் அச்சுறுத்தியும், மிகைப்படுத்தியும் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதையே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்

எஸ்.ஜெய்சங்கர் விளக்கினார். ஆயினும் டிரம்ப் தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகிறது. பிரதமர் மோடி உடன் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் டிரம்ப்-அய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை எளி தாக்குவதன் மூலம் டாலர் மீதான சார்புநிலையைக் குறைப்பதில் பிரிக்ஸ் நாடுகள கவனம் செலுத்தியுள்ளன. இந்த அணுகுமுறை, டாலர் சார்ந்த வர்த்தகத்திற்கு மாற்றுகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்திய அதிகாரிகளின் முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
மற்ற நாணய மதிப்புகள் அதிகளவில் குறைகிறது

உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதிய அமைப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார், இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தாலும் மற்ற நாணய மதிப்புகள் அதிகளவில் குறைகிறது.

உலகளவில் பல நாடுகள் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் இயங்கி வரும் வேளையில், ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின்பு இந்த எண்ணம் பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் தீவிரம் அடைந்தது. இதனால் டாலரின் ஆதிக்கம் படிப்படிப்படியாக குறைந்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது பெரும் தலைவலியாக மாறத் துவங்கியது. இதை தடுக்கவே டிரம்ப் தற்போது அதிரடிகளைக் கிளப்பி வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *