மயிலாடுதுறை, பிப். 10- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கி. தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று தலைவரை முன்மொழிந்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞான.வள்ளுவன் முன்னிலை வகித்தார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகத்திற்கு இளைஞர்களை பெரும் அளவில் ஈர்க்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றும், தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கழகத்தின் செயல்பாடுகளையும் பல்வேறு வகைகளில் எழுதி மக்களுக்கு அவற்றை தெரிவிக்கவும், புரட்டு களை முறியடிக்கவும் கழக எழுத்தாளர்களின் எண்ணிக் கையைப் பெருக்க வேண்டும் என்றும், வரும் 15-02-2025 அன்று சிதம்பரத்தில் நடக்கவிருக்கும் பொதுக்குழு சிறப்பாக நடைபெற இம்மாவட்டத் தோழர்கள் முழுஅளவில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் விரிவாகத் தனது உரையில் குறிப்பிட்டார். கூட்டத்தில் கழகத் தலைமையால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் கொக் கூர் கு.இளமாறன் மற்றும் புதிய பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளரால் சிறப்பு செய்யப்பட்டது.
இரங்கல்
மறைந்த கழகத் தோழர்கள் புதுப்பட்டினம் சுப்பையன் மற்றும் மயிலாடுதுறை ஒன்றிய கழகத் தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன் மற்றும் அவர் துணைவியார் செந்தாமரை ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும்
செம்பனார்கோயில் ஒன்றியத் தலைவராக அய்யப்பன் ஓட்டல் உரிமையாளர் அன்பழகன், குத்தாலம் ஒன்றிய செயலாளராக தி.சபாபதி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டும்,
சிதம்பரத்தில் நடைபெறவுள்ள கழகப் பொதுக்குழுவிற்கு மயிலாடு துறை மாவட்டம் சார்பாக பெரும் அளவில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திரசேகரன், மயிலாடுதுறை நகரத்தலைவர் சீனி.முத்து, குத்தாலம் நகரத் தலைவர் சா. ஜெகதீசன் வைத்தீசு வரன்கோயில் நகரத் தலைவர் வி.ஆர்.முத்தையன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் அ. சாமிதுரை, செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கவுதமன் மயிலாடுதுறை நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ், மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரெ. செல்லதுரை நகர ப.க. தலைவர் செல்வராஜ் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன்சாமிக்கண்ணு பெரியார் பிஞ்சுகள் தமிழினி, தமிழ்நிலவன், செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்டச் செயலாளர் கொக்கூர் கு. இளமாறன் நன்றி கூறினார்.