சேலம், பிப்.5 சேலத்தில் கடந்த 1.2.2025 அன்று காலை 10:30 மணிக்கு தந்தை பெரியார் சிலை வளாகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
மேட்டூர் மாவட்ட காப்பாளர் சி சுப்பிர மணியன், நாமக்கல் மாவட்ட தலைவர் குமார், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ சேகர், மேட்டூர் மாவட்ட செயலாளர் ப.கலைவாணன், குமாரபாளையம் நகர தலைவர் சரவணன், குமாரபாளையம் நகர செயலாளர் காமராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
புதிதாக அமைக்கப்பட்ட 26 அடி உயர கொடிக் கம்பத்தில் சேலம் மாவட்ட காப்பாளர் கி.ஜவகர் இயக்கக் கொடியை ஏற்றி வைத்தார். ஏற்கெனவே இருந்த கொடிக் கம்பத்தில் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி ஆகியோர் இயக்கக் கொடியை ஏற்றி வைத்தனர்.
தமிழர் தலைவர் பிறந்தநாள் கல்வெட்டுத் திறப்பு
தமிழர் தலைவர் பிறந்தநாள் கல்வெட்டை மேட்டூர் மாவட்ட காப்பா ளர் பழனி புள்ளையண்ணன் திறந்து வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெய ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் சேலம் மாவட்ட கழகம் பெயர் பொறித்த பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் கமலம், மகளிரணித் தோழியர் மல்லிகா, மாவட்ட மகளிரணித் தலைவர் சுஜாதா தமிழ்செல்வன், மகளிர் சுயமரியாதை அறக்கட்டளை நிறுவனர் அப்பாவு புவனேசுவரி, ப.கஸ்தூரி, ப.காயத்ரி, சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, ஓமலூர் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன், இல.நடராஜன், அம்மாபேட்டை பகுதி செயலாளர் சு. இமயவரம்பன், ப.விஜய், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி அன்புமதி, கஞ்சநாயக்கன்பட்டி சிறீதர், மணிமாறன், கலைஅரசி, அய்யள், கே.எஸ்.மணி, சண்முகம், கிச்சிப்பாளையம் பன்னீர்செல்வம், ரஞ்சித் குமார், சுந்தர், ஆர் ரவி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
தாதகாப்பட்டி பகுதி செயலாளர் சீனிவாசன் நன்றி கூற, பிறந்தநாள் விழா இனிதே முடிவடைந்தது.