மருத்துவக் கல்லூரி சேர்க்கை – காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும்

Viduthalai
2 Min Read

அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 16  அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியாவிடம் தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கினார். 

உத்தராகண்ட் மாநிலம் டேராடூ னில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநிலசுகாதாரத்துறை அமைச்சர்களுடனான 15-ஆவது சுகா தார மாநாடு நடைபெற்றது.. இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15.7.2023 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தமிழ்நாடு சுகாதா ரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழுமஇயக்குநர் சில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

அந்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரம்: மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கோயம்புத் தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல் லூரிகளை அமைக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல் லூரிகளில் புதிய அரசுசெவிலியர் கல் லூரிகளை நிறுவ வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங் குமுறைவிதிகள், மருத்துவ படிப்பு களுக்கான பொது கலந்தாய்வு, தேசிய மருத்துவ ஆணையத்தின் (மருத் துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங் களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத் துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு 2023) வரைவு ஆகியவற்றை கைவிட வேண்டும். 

துணை சுகாதார நிலையங்கள்

அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள மருத்துவப் படிப்புக் கான இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், 1,000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்களை நிறுவ வேண்டும். 

சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட கட்டடம் அமைக்க வேண்டும். 

இவ்வாறு தமிழ் நாடு அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *