வட மாநிலங்களில் கடும் வெள்ளம்

2 Min Read

75 ஆயிரம் சரக்கு லாரிகள் தமிழ்நாட்டில் நிறுத்தம்

சேலம், ஜூலை 16 நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த தொழிலை நம்பி ஓட்டுநர் கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர். 

தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங் களுக்கு குறிப்பாக ஜவுளி, முட்டை, இரும்பு தளவாடங்கள், சிமெண்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கெமிக்கல், கல் மாவு, ஜவ்வரிசி, வெல்லம் தேங்காய், காய்கறிகள் உள்பட பல் வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன . இதே போல வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு, ஆப்பிள் மற்றும் ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படு கின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைத்து வருகிறது. சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக் கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு உள்பட பல்வேறு காரணங் களால் லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டில்லி, மகாராட்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம் உட்பட வடமாநி லங்களில் கன மழை பெய்து வருகிறது . இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறு வனங்கள் முடங்கி உள்ளன. மேலும் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் தமிழ் நாட்டிலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்கா மலும், வட மாநிலத்திற்கு செல்ல முடி யாமலும் தமிழ்நாட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக லாரி தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள தொழில் களும் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, பட்டாசு, இரும்பு தளவாடங்கள், கெமிக்கல், கல்மாவு, ஜவ்வரிசி, தேங்காய், வெல்லம், மஞ்சள், அரிசி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன. வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படும் பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *