அரித்துவார், ஜன. 28- அரித்துவார் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜ மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு உத்தரகாண்ட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பி னரும், பாஜ தலைவருமான குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் தனது ஆதரவாளர்களுடன், கான்பூரில் இருக்கும் தற்போதைய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் குமாரின் அலுவலகத்தை நோக்கி சென்றார். அங்கு உமேஷ் குமாரின் ஆதரவாளர்களும் கூடி இருந்தனர். திடீரென இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
துப்பாக்கியால் சுட்டனர்
குன்வர் பிரணவ் சிங்கின் ஆதரவாளர்கள் சிலர் காரில் இருந்து இறங்கியதும், உமேஷ் குமாரின் அலுவலகத்தைத் தாக்கி துப்பாக்கியால் சுட்டனர். கோபமடைந்த சட்டமன்ற உறுப் பினர் உமேஷ் குமார், தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் சிங்கின் ஆதரவா ளர்களை நோக்கி ஓடினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் லேசான தடியடி நடத்தி அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் டேராடூன் காவல்துறையினர் மேனாள் சட்டமன்ற உறுப்பி னர் குன்வர் பிரணவ் சிங் சாம்பியனை கைது செய்து ஹரித்வார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தோல்வியால் தாக்குதல்
இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் குமார் மீது குன்வர் பிரணவ் சாம்பியனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குன்வர் பிரணவ் சிங் கைது குறித்து சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் குமார் கூறுகையில், ‘குன்வர் பிரணவ் சிங்கின் ஆதரவாளர்கள் லாண்தௌரா மற்றும் தண்டேரா வில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். அதையடுத்து தனது 50 ஆதரவாளர்களுடன் எங் களை தாக்க வந்துள்ளார்’ என்றார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இரு தரப்பு மோதலால் உத்தரகாண்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.