சென்னை, ஜூலை 17- வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3 ஆயிர த்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தி னால் வர்த்தக பிரிவின் படி கட்டணம் வசூலிக் கப்படும் என சமுக வலைத் தளங்களில் பரவும் தக வல்கள் உண்மையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள் ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வீடு, குடிசை , கைத்தறி, விவ சாய இணைப்புகள் என மொத்தம் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்பு கள் உள்ளதாகவும், அதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 42 லட்சம் என்றும், மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகி றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலை யில் சமூக வலைத்தளங் களில் ஆண்டுக்கு 3ஆயி ரத்து 600 யூனிட் மின் சாரம் பயன்படுத்தினால் வீட்டு மின் இணைப்புக ளுக்கு வணிக நிறுவனங் கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு வசூலிக்கப் படுவது போல வர்த்தக கட்டணமாக வசூலிக்கப் படும் என தகவல்கள் பரவி வருவதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் மின் சார வாரியம் அறிவித் துள்ளது. மேலும், தமிழ் நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட் டுக்குமேல் 4 சதவீதம் பேர் மட்டுமே மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்றும் மின்சார வாரி யம் தெரிவித்துள்ளது.