இந்தியாவின் வரலாற்றை உலகிற்கு அளித்த தொல்லியல் ஆய்வாளர் அெலக்ஸாண்டர் கன்னிங்காம் பிறந்த நாள் இன்று! (23.1.1814)
சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை ஆய்வு செய்து சான்றுகளோடு அறிக்கையாக நமக்குத் தந்த மேதகு ஜான் மார்ஷல் பற்றி அனைவரும் அறிவோம்.
ஆனால் அவருக்கு அகழ்வாராய்ச்சிகள் செய்ய ஊக்கம் கொடுத்து – இந்திய வரலாற்றையும், நமது தேசியக்கொடியின் மய்யத்தில் இருக்கும் அசோகச் சக்கரத்தையும், தேசிய முத்திரையான அசோகத்தூணையும் நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் ஆவார்.