புதுடில்லி,ஜன.23- நவம்பர், 2024 வரையில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.48 சதவீதம் ஆக இருந்தது.
தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கத்தினால் மக்களின் அன்றாடச் செலவும் அதிகரித்துள்ளது.
2021 – 2022ஆம் நிதியாண்டில் 19 கோடித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்ற நிலையில், வறுமைக்கோட்டின் கீழ்தான் இத்தொழிலாளர்கள் வருகிறார்கள்.
2012 முதல் நுகர்வு – செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை ஒன்றிய அரசு வழங்காத நிலையில், வறுமை விகிதம் குறைந்துள்ளதாகக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், திறன் இந்தியா, கரீப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரியின் திட்டம் போன்றவை ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் இத்திட் டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதில் சில இடர்ப்பாடுகள் நீடிக்கின்றன.
அந்த வகையில், வறுமையை நீக்குவதில் இந்தியா இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.