தமிழ்நாட்டில் ஆயிரம் முதலமைச்சர் மருந்தகங்கள் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் தொடங்க நடவடிக்கை

2 Min Read

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில்

சிவகங்கை, ஜன.23 தமிழ் நாட்டில் முதற் கட்டமாக 1,000 முதலமைச்சர் மருந்த கங்கள் தொடங்குவதற் கான பணிகள் தொடங் கப்பட்டு உள்ளன.

குறைந்த விலையில் மருந்துகள்

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரி வித்திருப்பதாவது: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக முதலமைச்சர் மருந்தகங்கள் 1000 இடங்களில் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொழில ்முனை வோர்களிடமிருந்து 638 விண்ணப்பங்களும் மற்றும் கூட்டுறவுச் சங் கங்களிடமிருந்து 490 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 1128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பரி சீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1.50 லட்சம் முதற்கட்ட அரசு மானியமாக விடுவிக் கப்பட்டுள்ளது.

பயிற்சி

முதலமைச்சர் மருந்தகம் அமைக்க விண்ணப்பித்துள்ள தகுதியான தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக நேற்று (22.1.2025) தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மருந்தாளு னர்களுக்கு மருந்து இருப்பு பராமரிப்பு, விற்பனை செய்யும் முறை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகள் மற்றும் மென்பொருள் பயன்பாடு குறித்து மென்பொருள் வல்லுநர், மருந்து கட்டுப் பாட்டு துறை மற்றும் மருத்துவ சேவைக் கழகத்தின் வல்லுநர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஒன்றிய கூட்டுறவு வங்கியின் காணொளிக்காட்சி கூட்ட அரங்கில் பயிற்சி வழங்கப்பட்டது. முத லமைச்சர் மருந்தகத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று களப் பயிற்சி வழங்கப் படும். பின்னர், விண் ணப்பித்த தகுதியான தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்க மருந்தாளுநர்களுக்கும் சென்னையில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும்.

விரைவில் தொடங்க நடவடிக்கை

முதலமைச்சர் மருந்த கம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்பார்வை யிட அனைத்து மாவட் டங்களிலும் கூடுதல் பதிவாளர் நிலையில் மாமண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து முதலமைச்சர் மருந்தக கடைகள் மற்றும் மாவட்ட சேமிப்புக் கிடங்குகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முதலமைச்சர் மருந்தகம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *